எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி பள்ளியில் மாறுவேட போட்டி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியாற்றி வரும் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் பல்வேறு இலக்கிய மன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதற்கு ஆண்டுதோறும் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் மூவர் இலக்கிய மன்ற செயலர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

அதன் அடிப்படையில் இவ்வாண்டு பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்.செந்தில்குமார் ,கே.திருவிக்ரமநாராயன், பி.கண்மணி ஆகியோரின் பொறுப்பில் இலக்கிய மன்ற போட்டிகள் இவ்வாண்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி பள்ளி வளாகத்தில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவிகள் கலந்து கொண்ட மாறுவேடப் போட்டியானது நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர்,
எஸ்.அறிவுடைநம்பி அவர்கள் தலைமையில் ,
உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளிதரன் ,
என்.துளசிரங்கன்,டி.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, காமராசர், டாக்டர் அம்பேத்கர், விநாயகர் திரு உருவம், மீனாட்சி திரு உருவம் போன்ற வேடங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மேல்நிலை பிரிவிற்கு முதுகலை ஆசிரியர்கள் கே.இளங்கோவன்,என்.பத்ரி நாராயணன்,இளஞ்செழியன் ஆகியோர் நடுவர்களாகவும் ஒன்பது, பத்து பிரிவிற்கு பட்டதாரி ஆசிரியர்கள் ஜே.கவிதா ஜே.கிருத்திகா ,
ஏ.ஸ்டாலின் ஆகியோர் நடுவர்களாகவும்
6 ,7,8 வகுப்புகளுக்கு வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் கே.தியாகராஜன், தேசிகன் ஆகியோர் நடுவர்களாகவும் சிறப்பாக பணியாற்றினர்.
இலக்கிய மன்ற துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.