பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 35வது ஆண்டு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசைசௌந்தர்ராஜன் கலந்து கொண்டார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் நாகராஜன், தலைமை தாங்கினார். பள்ளியின் தலைவர் கரிகாலன், துணைத் தலைவர் சிவாஜி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் திருஞானம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை ரதிப்பிரியா, வரவேற்றார்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவதுநகர் புறங்களில் பள்ளிநடத்துவதை
விட கிராமப் பகுதிகளில் பள்ளி நடத்துவது மிகவும் சிரமமான காரியம். இன்றைய நாளில் கிராமப்புற பள்ளி 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெற்றி கரமாக நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது.

அதேபோல் பள்ளி மாணவ மாணவிகள் காலை உணவை கட்டாயம் தவிர்க்க கூடாது.
நமது இயற்கை உணவுகளான சிறுதானியம்
மற்றும் அரிசி உணவுகளையே அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார். பள்ளி நிர்வாகத்திடம் மாணவ மாணவியருக்கு யோகா சொல்லித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார் மேலும் மாணவ மாணவிகளிடம் நேரடியாக கேள்விகளை கேட்ட பொழுது அதில் ஒரு மாணவி நீங்கள் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் எத்தனை மார்க் என்று கேட்டதற்கு அதற்கு அவர் டாக்டராக வருவதற்கு தேவையான மதிப்பெண்கள் எடுத்ததாகவும் அதுபோல் நீங்களும் நல்லா படித்து நல்ல மார்க் எடுத்தால் டாக்டர் ஆகவும் கலெக்டராகவும் கவர்னர் ஆகவும் கூடவரலாம் என்று பேசினார். தொடர்ந்து பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *