திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோயில் 1008 பரத கலைஞர்கள் பங்கேற்கும் மகா பரதநாட்டிய நிகழ்ச்சி.

தஞ்சை மாவட்டம் பிரசித்தி பெற்ற திருபுவனம் கம்பகரேஸ்வரர் (சரபேஸ்வரர்) திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு 1008 பரத கலைஞர்கள் பங்கேற்கும் மகா பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்து வருகிறது.தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனம் பிரசித்தி பெற்ற கம்பகரேஸ்வரர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கக்கூடிய இக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நாளை முதல் கால் யாக பூஜைகளுடன் எட்டு கால யாக பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது.

கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீன கலை மையம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பரதக்கலைஞர்கள் பங்கேற்று மகா பரதநாட்டிய நிகழ்ச்சி தருமபுரம் ஆதீனம் 27வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர் நடந்து வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *