தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் திருவலஞ்சுழி ஊராட்சியில் 40 ஆண்டுகளுக்கு மேல் குடிமனை பட்டா இல்லாத வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டும் ஒரே குடும்பத்தில் நான்கு பேர் மூன்று பேர் வாழ்வதற்கு வழி இல்லாமல் ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கும் குடிமனை பட்டா கேட்டு மனு சி பி எம் எல் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அளிக்கப்பட்டது இந்த மனு தொடர்பாக கும்பகோணம் ஒன்றியம் திருவலஞ்சுழி விஏஓ அவர்கள் கவனத்திற்கு வரப்பெற்றது

இதில் திருவலஞ்சுழி ஊராட்சி மணப்படையூர் கிராமத்தில் இரண்டு ஏக்கர் 17 சென்ட் அரசுக்கு சொந்தமான இடம் கண்டறியப்பட்டு குடிமனை பட்டா இல்லாத ஏழை மக்களுக்கு குடிமனை பட்டா வழங்குவதற்கு தஞ்சாவூர் மாவட்டம் உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் பேரிலும் கும்பகோணம் உயர் திரு கோர்ட் ஆட்சியர் அவர்களின் ஆணைக்கு இணங்க கும்பகோணம் மதிப்பிற்குரிய உயர்திரு வட்டாட்சியர் அவர்களின் கடுமையான முயற்சியின் வாயிலாக மதிப்பிற்குரிய சோழன் மாளிகை ஆரை அவர்களும் மதிப்பிற்குரிய உயர்திரு திருவலஞ்சுழி விஏஓ அவர்களும் பெரும் முயற்சிக்கு மத்தியில் குடிமனை பட்டா இடத்தினை தேர்வு செய்து இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்

தேர்தல் பணி சுமையும் அதிகாரிகளுக்கு அதிகமாக உள்ள காரணத்தினால் இடத்தை அளவீடு செய்து ஒதுக்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டதாலும் இதை உடனடியாக சரி செய்திட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வீட்டு
குடிமனை பட்டா கோரிய பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து நினைவு படுத்துவது தொடர்பாக சென்றிருந்தோம் அங்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி இன் (மாவட்ட செயலாளர்) தோழர் இரா. அருணாச்சலம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் சிபி எம் எல் (மக்கள் விடுதலை) கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர் சா. செந்தில்குமார் கும்பகோணம் (ஒன்றிய செயலாளர்) தோழர் பி. சங்கர் கும்பகோணம் (மாநகர செயலாளர்) தோழர் வி. ஜி .ஆர். கோபி (வாடகை வீ. கு.உ. ச.(மாவட்ட செயலாளர்) தோழர் எம் சங்கர் திருவலஞ்சுழி ஊராட்சி செயலாளர் தோழர் .முத்து திருவிடைமருதூர் (ஒன்றிய பொறுப்பாளர்) தோழர் பாலமுருகன் சோசலிச இளைஞர் மன்ற கும்பகோணம் (ஒன்றிய பொறுப்பாளர்) தோழர்: சா.செல்வம் மணப்படையூர் (கிளை செயலாளர்) மற்றும் பெண்கள் அமைப்பு கட்சியின் தோழர்கள் கலந்து கொண்டனர் எங்களுடைய (வீட்டுமனை) கோரிக்கையை உடனடி கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்முறை படுத்திட நடவடிக்கை எடுத்து தருவதாக உயர்திரு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உறுதியளித்து உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *