மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் பன்முகத்திறமைத் திருவிழா 2024 ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டக் கல்வி அலுவலர் சுப்பாராஜு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஜான்சி, எஸ்தர் இந்திராணி முன்னிலை வகித்தனர். ஐந்தாம் வகுப்புக்குழந்தைகள் தேவதர்ஷினி, , ஸ்ரீ ஹரி, தர்ஷினி, ஹரிப்பிரியா, முனீஸ்வரி, ஹர்ஷினி ஆகியோர் வரவேற்றனர்.
சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் முத்துமணி கலந்து கொண்டார். விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேல் குமரன், முன்னாள் மாணவர்கள் அலாவுதீன், பிரபு ,ரபீக் ராஜா, முன்னாள் யோகா ஆசிரியை நாகேஸ்வரி கலந்து கொண்டனர். விழாவில் குழந்தைகளுடைய பரத நடனம், மேற்கத்திய நடனம், நாடகம், பேச்சு, கவிதை, மிருதங்க வாசிப்பு, கதை கூறுதல், ஆங்கில வாசிப்பு, வில்லுப்பாட்டு, சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஊராட்சி மன்றத் தலைவர்,மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், சிறப்பு விருந்தினர் வாழ்த்துரை வழங்கினர்.
படிப்பு, வருகை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த மாணவர் பள்ளி முன்னேற்றத் தன்னார்வலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாம் வகுப்புக் குழந்தைகள் கெளதம், கனிஷ்காவிற்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த பள்ளி மேலாண்மைக் குழு விருது உறுப்பினர் நூர் முகமதுக்கு வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியை மாலா நன்றி கூறினார். ஆசிரியர் மோசஸ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக், குழுவினர், பெற்றோர்கள், இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்கள் விஜயகுமார், தூய்மைப் பணியாளர் மாரியம்மாள், சன்னாசி சிறப்பாகச் செய்திருந்தனர்.