செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்து சூனாம்பேடு அருகே உள்ள இல்லீடு
ஊராட்சியில் இலவச தையல் பயிற்சி வீட்ஸ் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் சார்பில்
100 மகளிர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி மாநில
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் அடிப்படை வேலை வாய்ப்புக்கான இலவச தையல் பயிற்சி வீட்ஸ் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் இல்லிடு மூலம் 100 மகளிர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் சான்றிதழ் பெற்றுக் கொண்டவர்கள் எங்களைப் போல் மற்ற பெண்களையும் தையில் பயிற்சி கற்றுக்கொண்டு சாதிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வீட்ஸ் திறன் வளர்ப்பு பயிற்சி மூலம் தேர்வு பெற்ற அனைவருக்கும் சான்றிதழை வீட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் இரா.கோபுராஜ் வழங்கி அனைவரையும் கௌரவித்தார்.