தை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மலை இருக்கும் சிவன் ஆலயத்திற்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் வருகிறார்கள்.
அதே போல இந்த ஆண்டும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக இங்கு சுவாமி தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மிக சிறப்பாக வழங்கப்பட்டது.
இந்த மாபெரும் அன்னதான விழா ஏற்பாடுகளை சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயலாளர் திரு.பெத்ராஜ் அவர்கள் தலைமையில்
நிர்வாகிகள் காளிராஜன், வடிவேலன், லிங்கேஸ்வரன், சிவகுமார், குமார், கதிர், மாஸ்டர் குமார், பாலாஜி, மாஸ் காளி மகளிர் அணி கனகலெட்சமி, சுகிர்தா, ரதி உட்பட பல நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்திருந்தனர்.
அன்னதான விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்து சென்றனர்.