தென்காசி வட்டம்,பாப்பான்குளம் கிராமம் பெரியதொரு வில் மயானம் பாதையில் அரசு பாலம் கட்டித்தர வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தேவேந்திர பேனாக்கள் தலைவர் வழக்கறிஞர் டி.சி. பாலசுந்தரம் கோரிக்கை மனு அளித்தார்.
அதனை யெடுத்து அவர் டி.சி பாலசுந்தரம் கூறுகையில் பாப்பான்குளம் கிராமம்,பெரியதெரு பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவர்கள்
சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்கு சொந்தமான ஊருக்கு தென்புறம் அரை கிலோமீட்டர் தொலைவில் தனியான மயானம் உள்ளது.இந்த மயானத்தில் அரசு திட்டத்தின்கீழ் ஈமக்கிரியை கட்டிடமும்,எரியூட்டும் மேடையும் கட்டப்பட்டுள்ளது.
இந்த மயான பாதைக்கு இடையில் துப்பாக்குடி கால்வாய் அமைந்துள்ளது ,இந்த கால்வாயில் எப்பொழுதும் பாசான தண்ணீர் செல்கிறது ,மழைக்காலங்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் செல்வதாக தெரிகிறது.
இந்த சூழலில் பெரியதெரு பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்கும்,தகனம் செய்வதற்கும் மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள் இந்த இழிநிலை பல ஆண்டு காலமாக தொடர்ந்து நிலவி வருகிறது இந்த சிரமத்தை போக்குவதற்கு துப்பாக்குடி கால்வாய்க்கு இடையே அரசு பாலம் கட்டுவதற்கு அக்கிராமத்து மக்கள் பலமுறை அரசிடம் மனு கொடுத்தும் இதுவரை பாலம் கட்டுவது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.
பட்டியலி மக்களுக்கு அத்தியாவசியமாகவும் ,அடிப்படை உரிமையாகவும் அரசு சுடுகாட்டு பாதை,பாலம்,கட்டிடம்,தண்ணீர் வசதி செய்து கொடுக்க ஆதி திராவிட நலத்துறையின் கீழ் சிறப்பு விதிகள் இருக்கும்போது ,இதுவரை அரசு இக்கிராமத்து சுடுகாட்டு பாதையில் பாலம் கட்டி கொடுக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
அடிப்படை வசதி கூட செய்து தரமுடியாத நாட்டில்தான் வாழ்கிறோம் என்று உணர்வு மேலோங்குகிறது.
ஆகையால் பாப்பான்குளம் பெரியதெரு மக்களின் மயான பாதையை உடனே அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்து துப்பாக்குடி கால்வாய் இடையே போர்க்கால அடிப்படையில் பாலம் கட்டி கொடுத்து மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்நிகழ்வில் இயக்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.