எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு. கடல் சீற்றத்தால் படகு கவிழ்த்து கடலில் விழுந்து மாயமான நிலையில் உடல் கரை ஒதுங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் சுனாமி நகர் பகுதியை வசித்து வருபவர் செல்வமணி மகன் செந்தில்வீரன் (48 )இவர் அதே பகுதியை சேர்ந்த மீனவர் குரல்மணி ஆகிய இருவரும் நாட்டு படகில் மீன் பிடிக்க சென்றனர். கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடும் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்தது.
இதில் படகிகல் இருந்த மீனவர்கள் கடலில் விழுந்தனர். குரல்மணி படகை பிடித்து உயிர் தப்பினார்.மாயமான செந்தில்வீரன் என்ற மீனவரை தேடும் பணி நடைபெற்று வந்தது .இதனிடையே இன்று காலை கொடியம்பாளையம் மீனவ கிராமத்தில் செந்தில் வீரன் உடல் கரை ஒதுங்கியது. இது குறித்து அறிந்த கடலோர குழுமம் போலீசார் மற்றும் புதுப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.