திருவாரூர் புத்தகத் திருவிழா கண்காட்சியில் வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த திருவாரூர் புத்தகத் திருவிழா கண்காட்சியில் ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியில், வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி சென்றனர்.
கடந்த பிப்ரவரி ரெண்டு முதல் திருவாரூர் புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஒரு நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி வலங்கைமான் ஒன்றியத்துக்கு ஒன்பதாவது நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
ஒன்பதாவது நாள் நடைபெற்ற புத்தகத் திருவிழா கண்காட்சியில் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 30 அரசு மற்றும் உதவி பெறும் உயர், தொடக்கநிலை பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவி-மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர்.
மேலும் தங்களது கல்வி திறன்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு வகையான புத்தகங்களை மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வாங்கி மகிழ்ந்தனர்.
புத்தகத் திருவிழா கண்காட்சிக்கு வட்டார அளவில் ஒருங்கிணைப்பாளர்களான வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி, அன்பழகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் முரளி ஆகியோர் செயல்பட்டனர்.