பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அருகே 4 நாட்களாக குடிநீர் வராததால் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் சவேரியார் மற்றும் அந்தோணியார் கோவில் தெருவில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் மோட்டார் பழுது காரணமாக நான்கு நாட்களாக குடிநீர் வராததால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்துள்ளனர்
இந்நிலையில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நடராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இன்று மாலைக்குள் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.