மாணிக்கம்பட்டி ஊராட்சியில் பால்வளத்துறை சார்பாக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி முகாம்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி ஊராட்சி தனியார் மண்டபத்தில் தூய பால் உற்பத்தியாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாம் ஆவின் பொதுமேலாளர் சிவகாமி தலைமையில் நடந்தது .துணைப் பதிவாளர் செல்வம். உதவி பொது மேலாளர் கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கால்நடை மருத்துவர்கள் கார்த்திகேயன், பாலயோகிகனி, ஆகியோர்கள் அனைவரையும் வரவேற்று பால் உற்பத்தி மற்றும் தரமான பால் உற்பத்தி செய்வது குறித்து விளக்க உரையாற்றினர். தொடர்ந்து ஆவின் பொது மேலாளர் சிவாகமி பேசியதாவது.தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை 1 லிட்டருக்குரு. 3 ரூ வீதம் வழங்குதல். அண்ணா நல நிதி காப்பீடு திட்டத்தின் கீழ் தரமான பால் உற்பத்தி செய்து தரத்தின் அடிப்படையில் பால் கொள்முதல் செய்யப்பட இருப்பதால் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் பசு மாடுகள் பராமரிப்பு மற்றும் தரமான உணவு தானிய பொருட்கள் மூலம் பால் உற்பத்தியில் லாபம் ஈட்டும் வகையில் பால் கொள்முதல் சங்கங்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் ஒத்துழைப்பு என்பது மிகுந்த அவசியமாக உள்ளது .
எனவே பால் உற்பத்தியை அதிகப்படுத்துவது தரமான பால் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆவின் நிர்வாகம் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு பல்வேறு அரசு திட்டங்களின் மூலம் உதவி வருகிறது. அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் கறவை மாட்டுக்கடன் வழங்கப்படுகிறது.
எனவே இது போன்ற குறைந்த வட்டி மூலம் கிடைக்கப்பெறும் கடன்களை வாங்கி பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற வேண்டும் என்று பேசினார் வாடிப்பட்டி பால் சேகரிப்பு குழு மேலாளர் செல்வம் நன்றி கூறினார்.