திருவொற்றியூர்
பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 35 லட்சத்தில் சிறுவர் விலையாட்டு பூங்கா அமைக்கப் பட்டது. திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு KP சங்கர் அவர்கள் 14 பிப் 2024 அன்று மாலை திறந்து வைத்தார்.
திருவொற்றியூர் 4வது வார்டில் அமைந்துள்ள முருகப்பா குளம் பூங்கா. இப்பூங்காவில் காலையு மாலையும் நூற்றுக் கணக்கான ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் குழந்தைகள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
மின்விளக்குகள் இல்லாமல் இருந்ததால் இரவில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்தது. இதனால் மின்விளக்கு அமைக்க வேண்டும் மற்றும் இப்பூங்காவிற்கு வரும் குழந்தைகளௌ விலையாட சிறுவர் விலையாட்டு பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. 2022 ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் மாமன்ற உறுப்பினர் நிதி 35 லட்சத்தை சிறுவர் விலையாட்டுப் பூங்கா அமைக்க பரிந்துரை செய்தார்.
அதனடிப்படையில் முருகப்பா பூங்காவில் சிறுவர் விலையாட்டுப் பூங்கா அமைக்கும் பணி நிறைவு பெற்றது. மேலும் பூங்காவில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் முயற்சி மேற்கொண்டார். அதனடிப்படையில் 6.11 லட்சம் மதிப்பீட்டில் மின்விளக்குகள் அமைக்கும் பணியும் நிறைவு பெறௌறுளௌளது.
சிறுவர் விலையாட்டு பூங்காவை சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர். திறந்து வைத்தார். மற்றும் மின்விளக்குகளை இயக்கி துவக்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் ஆர். ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்டல அலுவலர் நவேந்திரன், செயற்பொறியாளர் முருகவேல், மின்துறை செயற்பொறியாளர் இம்த்தியாஸ், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், மின்துறை ஏ டி இ கண்ணன், உதவி பொறியாளர் அன்னலஷ்மி, உதவி பொறியாளர் மின்துறை தினேஸ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியம், பகுதி செயலாளர் கதிர்வேல், திமுக வட்ட செயலாளர் பவுல், பகுதிகுழு உறுப்பினர்கள் வெங்கட்டையா, அஅலமேலு கிளைசெயலாளர் குமார், ராமநாதபுரம் தலைவர் பாரதி பஞ்சாச்சரம் ஜோதிநகர் தலைவர் உதயகுமார் ஜோதிநகர் ஆலயதலைவர் தினேஸ் ஆகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்