தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான்குறிச்சி ஊராட்சி மாறாந்தை கால்வாயில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 81 -இலட்சம் மதிப்பீட்டில் உயர் மேல்மட்ட பாலம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாயமான்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பால்த்தாய் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற துணை தலைவர் கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி மகேந்திரன், ஆகியேர்
முன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம் ஒன்றியக்குழு தலைவர் எம். திவ்யா மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டு மாயமான் குறிச்சி, குருவன் கோட்டை,நாரணபுரம், துத்திகுளம் சிவலிங்கபுரம் அகரம், கிடாரக்குளம், வீராணம். சோலைசேரி, ஆகிய கிராமங்கள் பயன்படும் வகையில் மேல்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியினை
அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில் அதிபர் மணிகண்டன்,
வார்டு உறுப்பினர் பாஸ்கர், ஊரட்சி செயலர் தங்கப் பாண்டியன், குருவன் கோட்டை விவசாயிகள், சீனி, ரகுபதி, சுப்பிரமணியன், அலின், எமராஜன், கிருஷ்ணன், சேர்மக்கனி, மணி, மற்றும்
மாயமான் குறிச்சி விவசாயிகள் செல்லப்பா, பாண்டி,
செல்லையா, அபபாத்துரை,அரசு ஒப்பந்ததார், ராமசந்திர வேல் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.