சீர்காழியில் கடந்த 10 ஆம் தேதி மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போன சம்பவத்தில் மூவர் கைது.நகைகளை பறிமுதல் செய்து சீர்காழி போலீசார் நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரை சேர்ந்தவர் முனியசாமி மளிகை கடை நடத்தி வருகிறார்.வழக்கம்போல் கடந்த 10-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு வந்த நிலையில் மதிய உணவு அருந்த வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

அதிர்ச்சி அடைந்த முனியசாமி உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 65 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளி நகைககள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது குறித்து முனியசாமி அளித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று போலீசார் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை வழிமறித்து சோதனை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் முனியசாமி வீட்டில் கொள்ளை அடித்தது மூவர்தான் என்பது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ், ராதாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பதும இவர்கள் மூவரும் திட்டமிட்டு முனியசாமியின் வீட்டில் கொள்ளையடித்ததும் உறுதியானது. கொள்ளையடித்த நகைகளை உப்பணாற்றின் கரையில் பதுக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 65 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மீட்டனர். தொடர்ந்து மூவரையும் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *