திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் சமூக பணித்துறை மற்றும் வான் முகில் தொண்டு நிறுவனமும் இணைந்து இளம் தலைவர்களுக்கான ஜனநாயக மதிப்பீடுகள் பற்றிய திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் கல்லூரி வளாகத்தில் முதல்வர் முனைவர் வே.மைதிலி தலைமையில் நடைபெற்றது.

சமூகப்பணித்துறைத் தலைவர் முனைவர் நாகராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் முனைவர்.சாமுவேல் ஆஸிர் ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

வான் முகில் தொண்டு நிறுவனத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழகறிஞர் எம்.ஏ.பிரிட்டோ, ஜனநாயகத்தின் கருப்பொருள் அதன் செயல்படும் விதம் மற்றும் தாக்கங்கள் குறித்து மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினார்

வழக்கறிஞர் கணேசன் இன்றைய சமூக சமுதாய மற்றும் அரசியல் நிலைகளில் ஐனநாயக செயல்பாடு என்ற தலைப்பில் மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருள் இளைஞர்கள் சமூகத்திற்கு ஜனநாயகத்தின் மதிப்பீடுகளை எடுத்துச் செல்லும் விதம் ஆழமாக மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்.

பயிலரங்கில் மாரியம்மாள், ஒருங்கிணைப்பாளர், முனைவர் பொன்னி நன்றி கூறினார்.

இந்த நிகழ்வில் சமூக பணித்துறை மாணவிகள் மற்றும் முதுகலை மனித வளத்துறை மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *