வன உயிரின சரணாலயம் சார்பில் விழிப்புணர்வு குழுவினர் காட்டு தீ தடுப்பு விழிப்புணர்வு;-

தென்காசி மாவட்டத்தில் நெல்லை மாவட்டம் வன உயிரின சரணாலயம் சார்பில் சங்கரன்கோவில் வனச்சரகம், குற்றாலம் வனச்சரகம். கடையநல்லூர் வனச்சரகம் சிவகிரி வனச்சரகங்கள் மற்றும் திருநெல்வேலி அரும்புகள் அறக்கட்டளையின்க விழிப்புணர்வு குழுவினர்களுக்கு காட்டு தீ தடுப்பு விழிப்புணர்வு சிவகிரி பாலவிநாயகர் பள்ளி, சேனை தலைவர் பள்ளி, திருமலை கோவில் அடிவாரம் உட்பட பதிமூன்று இடங்களில் நடைப்பெற்றது. விழிப்புணர்வு

கலை விழிப்புணர்வு கலை நிகழ்வில்
காட்டுத்தீ ஏற்படுவதற்கான காரணங்கள். அதனால் ஏற்படும் தீய விளைவுகள். அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து சிறு நாடகங்கள். பாடல்கள், நடனங்கள் மூலமாக எடுத்து கூறினார்கள்.
சங்கரன்கோவில் வனச்சரகர். சிக்கந்தர்பாஷா, கடையநல்லூர் வனச்சரகர் சுரேஷ். குற்றாலம் வனச்சரகர் சிவகிரி வனச்சரகர் மௌனிகா, கிராம வன குழுவின் தலைவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் நிகழ்வின் நிறைவில் அரும்புகள் அறக்கட்டளையின் இயக்குனர் கேள்விகள் கேட்டு பரிசுகளை வழங்கினார் அரும்புகள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *