கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் சால்வை அணிவிப்பது கோமனம் கட்ட கூட பயன் படுத்த முடியாது.

முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேச்சு.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் அதிமுக கூட்டணி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்க்கு மாநகர செயலாளர் ராம.ராமநாதன்
தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன்
முன்னிலை வைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி மோகன், முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் மாநில இளைஞர் அம்மா பேரவை இணைச் செயலாளர் ஏ.வி.கே. அசோக்குமார்,மாநில நிர்வாகி அன்பரசன், கலந்து கொண்டு மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் பாபு அறிமுகம் செய்து வைத்து மாநகர கழக நிர்வாகிகளிடம் இரட்டை இலை சின்னத்தில் அதிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினர்.

அப்போது முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் கூட்டத்தில்
பேசியதாவது:-

பா.ஜ.க.வோடு கூட்டணி இல்லை என்று புறம் தள்ளி விட்டு அ.தி.மு.க. தேர்தல் களத்தில்
பணியாற்றி வருகிறது.

தேர்தல் களத்தில் 78 நாட்கள், 42 நாட்கள் என முந்தைய நாடளுமன்ற, சட்டமன்ற களத்தில் வாக்கு சேகித்தோம்.

ஆனால் தற்போது நடைபெறும் தேர்தல் களம் 19 நாட்களில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து விடும் இந்த நேரத்தில் அ.தி.மு.க.வினர் துண்டு, சால்வை என போட்டு நேரத்தை வீணடிப்பதை நிறுத்து விடவும்.

தற்போது சிவப்பு வண்ண கலரில் போடும் சால்வை
கோமனம் கட்ட கூட பயன் படுத்த முடியாது.

எனவே வருகிற தேர்தல் வாழ்வா சாவா என்ற அடிப்படையில் தொண்டர்கள் உழைத்து தி.மு.க. என்னும் மக்கள் விரோத ஆட்சியை அகற்றி வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வெற்றி பெற செய்து கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரங்களை வலுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் லெனின், ராஜு, பத்மகுமரேசன்,ராஜேந்திரன்,சின்னையன்,கோவிந்தராஜன் முத்துராஜா முத்துராஜா உள்பட கலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *