நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், விரல்மை, நம் வலிமை என்னும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 2,000 கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தேர்தல் சின்னம்போல் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில், விரல்மை, நம்வலிமை என்பதை வலியுறுத்தும் வகையில் பிரமாண்டமான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மாவட்டத்தில் உள்ள, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற, விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர், தேர்தல் போலீஸ் பார்வையாளர் உஷா ராதா, தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜி, மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், 2,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட விரல்மை, நம்வலிமை என்பதை வலியுறுத்தும் வகையில், ஓட்டுப்போடும் முத்திரையில், ஒரு சேர நின்று, ஓட்டுப்போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, தாசில்தார் சீனிவாசன், நகராட்சி கமிஷனர் சென்னு கிருஷ்ணன், ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.வகித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *