தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே!!!

திருப்பூர்

புனித ரமலான் மாதம்,மாதங்களில் சிறந்ததாக அமைந்ததைப் போன்று அதில் நிறைவேற்றப்படும் அனைத்து நற்காரியங்களும் சிறந்ததாக அமைத்து விடுகின்றன. குறிப்பாக அதில் வழங்கப்படும் தர்மமும் மற்ற மாதங்களில் வழங்கப்படும் தர்மத்தை விட சிறந்ததாக அமைந்து விடுகிறது.

எவர் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு வழங்குகிறாரோ அவருக்கு நோன்பாளிக்கும் வழங்கப்படும் நன்மையைப் போன்று கிடைக்கும் இதனால் நோன்பாளியின் நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பல்லடம் அறிவெளி நகரில் பல் சமய நல்லுறவு இயக்கம் ஒன்றிய செயலாளர் சுலைமான் தலைமையில் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ஹாஜி
ஜே. முகமது ரஃபீக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் (திமுக)
த. தேன்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மற்றும் மாவட்டத் தலைவர் ஜெ. ஷாஜகான், மாவட்டச் செயலாளர்
அ. ஹக்கீம் திருப்பூர் தெற்கு மாவட்ட தமுமுக செயலாளர் முஜிபுர் ரஹ்மான் பல்லடம் வட்டார தலைவர் (காங்கிரஸ்) கணேசன் ஊராட்சி மன்ற தலைவர் திமுக சின்னப்பன் மாநில இலக்கிய அணி செயலாளர் (காங்கிரஸ்) ராம், மாவட்ட இளைஞரணி தலைவர் கே, உசேன், மாநகர தலைவர் முருகன்,மாவட்ட இலக்கிய அணி தலைவர் (காங்கிரஸ்) ஆதாம் மகன் முஸ்தபா, ஒன்றியதலைவர் சந்திரன், மாநகரப் பொருளாளர் சேட், மாநகர வர்த்தக அணி செயலாளர் ரஹீம், மாநகர வர்த்தக அணி செயலாளர் அனிபா, மற்றும் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் இஸ்மாயில், பாபுலால், கோவை மாவட்ட மாணவரணி செயலாளர் கோவை தல்ஹா , மற்றும் எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்த அனைத்து இயக்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். தொடர்ந்து அப்பகுதியில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் ஆதரவு நோட்டீசை வழங்கி ஆதரவு திரட்டினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *