சத்தியமங்கலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 5 லட்சத்து 66ஆயிரம் 210 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் குளத்துப் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் நொக்கனூர்க்கு சரக்கு வேனில் வந்த அருண்குமார் (31) என்பரிடம் சோதனை நடத்தியதில் ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் 210 ரூபாய் பணம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *