ஒசூர் அருகே 452 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் கோட்டை மாரியம்மன் தேர்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைப்பெறுவது வழக்கம்

பாகலூர் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மன்னர் காலத்தில் ஒசூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் வழிபட்டு வந்ததாகவும், பின்பு பாகலூர் கிராமத்திலேயே வழிபட கோட்டை மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் பங்குனி மாத தேர்திருவிழாவை 452 ஆண்டுகளாக நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ஒருவாரக்காலம் நடைப்பெறும் பாகலூர் கோட்டை மாரியம்மன் திருவிழா ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் 16 அன்று வரை நடைப்பெற உள்ளது

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைப்பெற்றது. சுற்று கிராம மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர். இன்று பூஜைகளுடன் தொடங்கிய தேரோட்டத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு மேற்க்கொண்டனர்..

திருவிழாவில் செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்களை தடுக்க பெண் போலிசார், பெண்களின் ஆடைகளை பாதுகாத்து செல்ல அறிவுறுத்தியிருந்தனர்..

ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் அவர்கள் தலைமையில் ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, முன்னெச்சரிக்கை பணிகள் மேற்க்கொள்ளப்பட்டிருந்தன..

திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானங்களுடன் தெலுங்கு மக்களின் பிரபல இனிப்பு வகையான ஒப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *