மதுரை மாட்டுத்தாவணிமார்க்கெட்டில் பச்சை காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.

அதன் பின்னர் இங்கி ருந்து தென் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் எடுத்துச் செல்லப்படு கிறது. இதுபோல் மதுரையில் உள்ள சில் லறை வியாபாரிகளும் இந்த மார்க்கெட் டுக்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருந்தது. குறிப்பாக, சின்ன வெங் காயம், தக்காளி போன்றவற்றின் விலை கடுமையாக குறைந்துள்ளது.

இதற்கிடையே, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று, பச்சை காய்கறிக ளான அவரை, பீன்ஸ், மிளகாய் போன்றவற்றின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதாவது, வழக்கமாக ரூ.60முதல் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும் பட்டன் பீன்ஸ், ஜெர்மன் பீன்ஸ், ரிங் பீன்ஸ் போன்றவற்றின் விலை உயர்ந்து ரூ.140-க்கு விற்பனையா னது. இதுபோல்,ரூ.50-க்கு விற்பனையாகும் மிளகாயின் விலையும் நேற்று ரூ.120-க்கு விற்பனையாது. ரூ.50-க்கு விற்பனையாகும் அவரை வகைகளின் விலையும் அதிகமாக இருந்தது. அதாவது, நேற்று ஒரு கிலோ நைஸ் அவரை ரூ. 130-க்கும், பெல்ட்அவரை ரூ.160-க்கும், பட்டை அவரை ரூ.150-க்கும் விற்பனையானது.

இந்த திடீர் விலையேற்றம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், ” தேர்தல் காரணமாக பெரும்பாலான மார்க்கெட் கடைகள் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், வரத்தும் வெகுவாக குறைந்திருந்தது. அதன் காரணமாக பச்சை காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, அவரை, பீன்ஸ், மிளகாய் போன்றவற்றின் விலை ஒருகிலோ வுக்கு ரூ.20 முதல் ரூ.70 வரை உயர்ந்துள்ளது. ஒரே நாளில் இந்த விலை ஏற்றம் உள்ளது. அதுபோல் இன்று முகூர்த்ததினம் என்பதாலும் திடீர் விலையேற்றம் உள்ளது.
இதுதவிர, ஒரு கிலோ சின்ன வெங்காயம் தரத்தை பொறுத்து ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதுபோல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.35 வரை விற்பனையாகியது. தக்காளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அதாவது 15 கிலோ எடை கொண்ட பெட்டியின் விலை ரூ.1.50 முதல் ரூ.250 வரை உள்ளது. இதனால், சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி தரத்தை பொறுத்து ரூ.10 முதல் ரூ.25-க்கு விற்பனையானது.

இதுபோல், கத்தரிக்காய் ரூ.40, வெண் டைக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.50, உருட்டு மிளகாய் ரூ.100, சம்பா மிளகாய் ரூ.70,கரு வேப்பிலை ரூ.60, மல்லிரு.40, புதினா ரூ.20, இஞ்சி ரூ.150, கேரட் ரூ.50, பீட்ரூட் ரூ.50, முள்ளங்கி ரூ.30, நூக்கல் ரூ.50, உருளைக் கிழங்கு ரூ.50, பாகற்காய் சிறியது ரூ.120. முட்டைக்கோஸ்ரூ.30 என விற்பனையானது. முருங்கைகாயின் வரத்தும் அதிகம் என்பதால் அது ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *