தென்காசி மே – 03
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து மே மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தென்காசி மாவட்ட தடகளகழகமும், பேச்சியம்மாள் கல்வி நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்துகிற மாபெரும் இலவச தடகள பயிற்சி முகாம் தொடங்கியது.
இந்த பயிற்சி முகாமில் கோடைகால இலவச பயிற்சிக்காக எவ்வித கட்டணமும் இன்றி நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் காலை மாலை சத்துள்ள உணவுப் பொருட்கள் வழங்கப் படுகின்றனர். இந்த முகாம் நேற்று இனிதே துவங்கியது இந்த பயிற்சி முகாமில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட தட கள கழகத்தின் செயலாளர் வழக்கறிஞர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ஜெய ரத்தின ராஜன் முன்னிலை வகித்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர்
ஏ ஜி எம் கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தடகள கழகத்தின் செயலாளர் செல்ல பாண்டியன் சிறப்புரை ஆற்றும் போது மிகவும் ஒரு சிறப்பான பயிற்சி முகாமினை பேச்சியம்மாள் கல்வி நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இதில் பங்கேற்பது தடகள பயிற்சி முகாமிற்கு மிகுந்த வரவேற்பு இருப்பதை காட்டுகிறது மாணவ மாணவிகள் 10 நாட்கள் நடைபெறும் இந்த இலவச சிறப்பு முகாமில் பயிற்சியினை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
முன்னதாக பேச்சியம்மாள் கல்வி நினைவு அறக்கட்டளையின் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேச்சியம்மாளின் புகைப்படத்திற்கு மாவட்ட தடகள கழக செயலாளர் செல்லப் பாண்டியன், ஜெயம் ரத்தின ராஜன்மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பேச்சியம்மாள் கல்வி நினைவு அறக்கட்டளையின் துணைத் தலைவர் சங்கரநாராயணன் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கௌரவப்
படுத்தினார். இந்நிகழ்ச்சியில் பிஸிக்கல் டிபார்ட்மெண்ட் ஹெட் துரை, பி.டி ஆசிரியர்கள் நாராயணன், முனீஸ், விக்னேஸ்வரி,பழனி, சாந்தப்பன்,மாலா, அன்னலட்சுமி,ராகவி, அட்சயா, தீபிகாஸ்ரீ, சந்தோஷ், சாய்,ரியாஸ்ரீ, குமார், பாலாஜி, ரமேஷ், மாரி,மற்றும் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், பலரும் கலந்து கொண்டனர். முடிவில் இலஞ்சி துரை அனைவருக்கும் நன்றி கூறினார்.