வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தின் சிறப்பு அம்சம் குறித்து வரைபடம் வரைந்து விளக்கம்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தின் சிறப்பு அம்சங்களை வரைபடங்களின் மூலம் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். கிராமப்புற வேளாண்மை அனுபவத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டுள்ள டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதி ஆண்டு மாணவிகள் வலங்கைமான் அடுத்த திருவோணமங்கலம் கிராமத்தில் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு செய்தனர். ஆலயம் அமர்ந்தாள் ஆலயத்தின் முன்பு திருவனமங்கலம் கிராமத்தின் சிறப்பு அம்சங்களை வரைபடங்களின் மூலம் மாணவிகள் கிராம மக்களுக்கு அறிவுறுத்தினர். கிராமத்தின் சமூக வரைபடம், வள வரைபடம், அன்றாட அட்டவணை, பயிர் முக்கோணம், எல்லைகள், படிப்பு விகிதம், காலக்கோடு, பிரச்சனைகள் முதலிய பல அம்சங்களை வரைபடம் மூலம் தெளிவாக வெளிப்படுத்தினர். அந்த கிராமத்தின் அம்சங்களை மாணவிகள் அறிய கிராம மக்கள் பெரிதும் உதவினர். மேலும் வரைபடங்கள் வரையவும், தங்கள் கிராமத்தின் சிறப்பு அம்சங்களை அறிவதிலும் கிராம மக்கள் ஆர்வம் காட்டினர். பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு என்பது ஒரு கிராமத்தின் வளங்களையும் அறியவும், அந்த கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை கிராம மக்களின் வாயிலாக தெரிந்து கொள்ளவும் உதவி புரியும் செயல்முறையாகும். மேலும் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு செய்வதன் மூலம், அந்தந்த கிராமத்து மக்களின் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு மேற்கொள்ளவும் பயனுள்ளதாய் அமையும்.