தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியாகின. மொத்தம் 91.55 சதவீதம் பேர தேர்ச்சி பெற்றுள்ளனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில், தஞ்சாவூர் சேர்ந்த
பள்ளி மாணவர் முகிலரசன். இவர் பாட்டியின் அரவணைப்பில் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம்‌ வகுப்பு பொதுத் தேர்வில் 455 மதிப்பெண்கள் பெற்று 10ஆம் வகுப்புக்குள் 10 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

இவர் சிறுவயதில் விளையாட்டுகளில் ஆர்வம் இருந்ததை அடுத்து பெற்றோர் அவ்வப்போது சிறு சிறு விளையாட்டுகளுக்கான பயிற்சிகளில் சேர்த்துள்ளனர்.”
“அதில் ஹூலா ஹூப், ஸ்கேட்டிங் மற்றும் நீச்சல் ‌செய்வதில் மாணவன் திறம்பட மாறியுள்ளார். இந்த நிலையில் மாணவன் ஆர்வமாக உள்ள இந்த விளையாட்டுகளில் பல்வேறு விதமாக தொடர்ந்து அதிக நேரம் செய்து கலாம், கின்னஸ், இன்டர்நேஷனல், யுனிவர்சல்,ஆல் இந்தியா, நோபல்,ஃபோனிக்ஸ் உள்ளிட்ட உலக சாதனை புத்தகத்தில் 10-ம் வகுப்பிற்குள் 10 உலக சாதனைகளை படைத்து சாதனையாளனாக மாறியுள்ளார்.”

உலக சாதனை பெற வேண்டும் என தனது பெற்றோர் நினைத்தனர்‌.முதல் முதலாக மூன்று வயதில் ஹூலா ஹூப் சுற்றத் தொடங்கினேன் தற்போது வரை சுற்றிக்கொண்டே இருக்கிறேன். கின்னஸ் வோர்ல்டு ரெக்கார்டில் ஹூலா ஹூப்பில் நின்று கொண்டு, மண்டியிட்டு, நடந்து கொண்டு, நடனமாடி என 30 நிமிடத்திற்கும் அதிக நேரம் செய்து உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார் .அடுத்தது இந்தியன் புக் ஆஃப் ரெகார்டில் ஸ்கேட்டிங் செய்து கொண்டே சுற்றினேன், இதுபோன்று நீச்சலிலும் உலக சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய தாத்தா,மாமா, மற்றும் உறவினர்கள் த தெரிவிக்கும் போது பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட பாடத்தில் 98 ; 92 ; 99 ஆகிய அதிக மதிப்பெண்கள்பெற்று சாதனை படைத்துள்ளார்.அது மட்டுமில்லாமல் விளையாட்டிலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
அதிக மதிப்பெண் பெற்று இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுப்பதாகவும் அவர் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தனது வெற்றியைக் குறித்து மாணவன் கூறுகையில் சிறு வயதிலிருந்தே படிப்பில் மிகுந்த ஆர்வமுடன் இருந்தேன். குறிப்பாக 10-ம் வகுப்பு வந்தவுடன் தொலைக்காட்சி பார்ப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டேன். தினந்தோறும் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனமுடன் படித்தாலே போதும். அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டு தீர்த்து செய்து கொள்வேன்.

தினசரி பாடங்களை அன்று வீட்டிற்கு சென்றதும் படித்து முடித்துவிடுவேன். இதனால் எந்த சிறப்பு வகுப்பிற்கும் நான் செல்லவில்லை. எனது படிப்பிற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தனர். மேலும் பள்ளி, ஆசிரியர்கள் ஊக்கமளித்து என்னை சிறந்த மாணவனாக உருவாக்கி உள்ளனர் எனக் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *