அனைத்து இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் கோவை மாவட்டம் சார்பாக அண்மையில் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது..
தமிழ்நாடு இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களின் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் அனைத்து இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் கோவை மாவட்டம் சார்பாக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்,கோவை கண்ணப்ப நகரில் உள்ள ஆர்.கே.மண்டப அரங்கில் நடைபெற்றது.
அனைத்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் கோவை,மாவட்ட தலைவர் தேவராஜ்,செயலாளர் சிவராஜ்,மகளிர் அணி மற்றும் கலை இலக்கிய அணி மாநில தலைவி லயன் டாக்டர் சந்திர பிரபா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு அழைப்பாளர்களாக இந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பின் அகில பாரத துணை தலைவர் ஸ்ரீராமன்,பொறுப்பாளர் விஜயகுமார்,இணை செயலாளர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அண்மையில் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது..
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழக அரசின் கலைமணி விருது பெற்ற மாணவி சம்யுக்தாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக திருகோவில் குழுவினரின் தாள நாத நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருக்கோவில் கூட்டமைப்பினர் பேசுகையில்,தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழைய கோயில்களை தேவைக்கேற்ப புனரமைப்பு செய்ய இந்து அறநிலையத்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் எங்கள் அமைப்பு சார்பாக விருட்சம் எனப்படும், மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் மற்றும் மரங்களை கோவில்களில் வளர்ப்பது தொடர்பான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்