தென்காசி
மின்வசதி இன்றி படித்து, சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு முன் னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நினைவு பரிசு ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார்.
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் மாணவி எம்.ஜெயலட்சுமி 500க்கு 479 மதிப்பெண் பெற்று பள்ளி யில் முதலிடமும், கணிதத் தில் 100 மதிப்பெண்களு பெற்று சாதனை படைத்துள்ளார் மாணவி ஜெயலட்சுமி யின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு மின்சார வசதி கிடை யாது. கடந்த ஆண்டு இதுபற்றி அறிந்த மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், மின்சார அலுவலகத்தில் பேசி, அம்மாணவி வீடு இருக்கும் இடம் வரை அரசு செலவிலேயே மின்கம்பம் அமைத் திட அனுமதி பெற்றுக்கொடுத்தார்
இருப்பினும் அப்பகு தியை சேர்ந்த சிலர் அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி. அந்த இடத்தில் மின்கம்பம் அமைக்கவிடாமல் தடுத்து விட்டனர். இருப்பினும் மின்சார வசதி இல்லா விட்டாலும், தன்னுடைய விடா முயற்சியால் படித்து பள்ளியின் முதல் மாணவியாக ஜெயலட்சுமி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி ஜெயலட்சுமியை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் அழைத்து பாராட்டியதுடன், திமுக சார்பில் நினைவு பரிசு மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கினார். அப் போது மாணவி தான் ஐ.ஏ.எஸ்.படிக்க விரும்புவ தாக தெரிவித்தார் .
இந்நிகழ்ச்சியில் அந்த மாணவியின் கணித ஆசிரியை மணிமேகலை, ஆசிரியர் அண்ணாதுரை, மாவட்ட தொண்டரணி தலைவர் மிலிட்டரி வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், ஒன்றிய கவுன்சிலரகள் சங்கர், தர்மராஜ், வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் அருணாப்பாண் டியன் முத்தையா உட்பட பலர்
கலந்து கொண்டனர்.