நியாய விலைக் கடைகளில் கட்டுபாடற்ற பொருட்கள் விற்பனை வரம்பை நீக்க வேண்டும் பொது விநியோக ஊழியர் சங்கம் கோரிக்கை

தென்காசி

தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று தென்காசி மண்டல இணைப்பதிவாளரை சந்தித்து
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்த. கட்டுபாடற்ற பொருட்கள் விநியோகம் வரம்பு நிர்ணயித்தலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த கோரிக்கை மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

தென்காசி மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் சுமார் 85% கிராமபுறம் சார்ந்தவை ஆகும். கிராமபுற மக்கள் நியாய விலைக் கடையில் அத்திவாசிய பொருட்களையே பொதுமக்கள் தங்களின் நிதிநிலைமைக்கு ஏற்ப இரண்டு தடைவ வந்து வாங்கும் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் நியாய விலைக் கடையில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விநியோகம் செய்ய வரம்பு நிர்ணயம் செய்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத செயல் ஆகும். இது நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு மட்டுமின்றி ஏழை எளிய பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.

தமிழகஅரசு நாள் தோறும் ஊடகங்கள் மூலம் கட்டுப்பாடற்ற பொருட்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை என விளம்பரம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கட்டுப்பாடற்ற பொருட்கள் விநியோகம் செய்ய கட்டாயப்படுத்துவது விற்பனையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தும் செயலாக உள்ளது.

மேலும் கட்டுப்பாடற்ற பொருட்கள் நகர்வு செய்யும் முதன்மை சங்கங்கள் மக்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் கொள்முதல் செய்து நகர்வு செய்யாமல் தங்களது சங்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் நுகர்வோர் விரும்பாத பலவித பொருட்களை நகர்வு செய்கிறது.

ஆகவே தாங்கள் தயவு கூர்ந்து எங்களது கோரிக்கையை ஏற்று கட்டுப்பாடற்ற பொருட்கள் விநியோக வரம்பை ரத்து செய்துவிட்டு பொது, மக்களுக்கு தேவையான பொருட்கள் மட்டும் நகர்வு செய்ய ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொது விநியோக சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர் எஸ். ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் ஆ.முருகன், மாவட்ட பொருளாளர் எஸ்.மாரிமுத்து, மாநில பிரதிநிதிகள் படியேறும் பெருமாள், சீனிவாசன், காளிராஜ் பாண்டியன், மாவட்ட துணை தலைவர் சங்கர், மற்றும் தென்காசி மாவட்ட , அனைத்து வட்டார நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *