தென்காசி, மே, 27,
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியாபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீருத்ரகாளியம்மன் கோவில் கொடை விழாவில் திருவாசக கமிட்டி குழு அமைப்பாளா் ராமநாத் தலைமையில் அம்மையப்பா் திருவாசக குழு திருவாசகிசிவபகவதி குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
இந்த கோவிலில் ஸ்ரீருத்ரகாளியம்மன், ஸ்ரீருனவிமோச்சனவிநாயகா், ஈஸ்வரியம்மன், கருப்பசாமி, பைரவர், வடக்கத்தியம்மன் உள்ளிட்ட சன்னதிகள் இருந்து வருகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் வாரத்தில் சுப்பிரமணியாபுரம் தேவேந்திரகுல வேளாளா் சமுதாய மக்கள் சார்பில் கோவில் கொடைவிழா சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம் இந்தாண்டு கொடை விழா கடந்த மே 21ஆம் தேதியில் திருக்கால்நாட்டு வைபத்துடன் துவங்கியது.
விழாவில் ஸ்ரீருத்ரகாளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்ர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் விழாவில் நாள்தோறும் கும்மிப்பாட்டு, திங்கள், செவ்வாய் கிழமைகளில் வில்லிசை, கரகாட்டம் முளைப்பாரி ஊர்வலம் புதன்கிழமை மஞ்சள் நீராட்டு அன்னதானம் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து திருவாசக கமிட்டி குழு அமைப்பாளா் ராமநாத் தலைமையில் அம்மையப்பா் திருவாசக குழு திருவாசகிசிவபகவதி குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகமிட்டி நிர்வாகிகள் வெள்ளையங்கிரி, பழனி, முனியராஜ், சின்னராஜ், சஞ்சய்காந்தி, பால்ராஜ், சுந்தர், சுரேஷ், சேகர், கணேசன், மாரித்துரை, மாரிச்செல்வம், குமார், இசக்கித்துரை, முத்துராஜ், மாரியப்பன், தங்கராஜ், ராஜேந்திரன், சுந்தர்ராஜ், கிருஷ்ணசாமி, பாஸ்கர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் சமுதாய பொறுப்பாளா்கள் சிறப்பாக செய்து வருகின்றனா்.