பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி(வயது -70) இவர் மே-27 ஆம் நேற்று மதியம் 1.50 மணியளவில் கொளக்காநத்தம் கிராமத்திலிருந்து அருகிலுள்ள கிராமமான குடிகாடு கிராமத்திற்கு நடந்துச் சென்றுள்ளார்.
வெயில் தாக்கம் தாங்கமுடியாமல் வழியில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்குச் விரைந்துச் சென்ற மருவத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட முதியவரின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து உடலை ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.