ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மதுபோதையில் புகுந்து நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் மருத்துவமனை பொருட்களை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட. மன்னார்குடி விழல்கார தெருவை சேர்ந்த தங்கராசு மகன் வடிவேலு (வயது-42) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்
இந்நிலையில் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கஞ்சா தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்