பொள்ளாச்சி: ஜூன் 4
பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஈஸ்வர சாமி தொடர்ந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை வகித்து வருகிறார் பொள்ளாச்சி தொகுதியில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வாக்கு என்னும் மையத்திற்கு வந்த ஈஸ்வர சாமி மற்றும் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது உள்ளிட்ட கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் மேலும் திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காலை சிற்றுண்டி திட்டம் இலவச பேருந்து பயண திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாலும் முதல்வரின் முத்தான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் ஈஸ்வரசாமி பெருமதித்துடன் தெரிவித்தார்