தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதிதேனி பாராளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் நடைபெற்றது அன்று நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று ஜூன் 4 இல் நடைபெற்று வருகிறது
இதன் படி வாக்குப்பதிவு 9 ஆவது சுற்று நிலவரம் படி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 247328 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் இரண்டாவது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும் தேனி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளருமான டிடிவி தினகரன் 113890 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்
அண்ணா திமுக வேட்பாளர் வி.டி நாராயணசாமி 65167 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் 32470 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார் சுயேட்சை வேட்பாளரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கம்பம் நகரை சேர்ந்த பி பிரகாஷ் 2448 வாக்குகள் பெற்று உள்ளார். இந்த நிலவரம் மதியம் 2.30 மணி நிலவரப்படி 9 ஆவது சுற்று வாக்குகள் நிலவரம் ஆகும் மொத்தம் 23 சுற்று வரை வாக்குகள் எண்ண வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது
இதன்படி 9 வது சுற்று நிலவரப்படி 1 லட்சத்து 33 ஆயிரத்து 848 அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது