தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதிக்கு ஆட்சியர் வெற்றிச் சான்றிதழை வழங்கினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் கனிமொழி 537879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தூத்துக்குடி தொகுதியில் முதல் சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த தி.மு.க. வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றுள்ளார்.
அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடும் தோல்வியை சந்தித்துள்ளனர். அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில், வஉசி பொறியியல் கல்லூரியில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதியிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.