திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.சுப்பராயன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திருப்பூர் மாநகராட்சி, எல்.ஆர்.ஜி. மகளிர் கலை கல்லூரியில் (04.06.2024) தேர்தல் பொது பார்வையாளர் .ஹிமான்சு குப்தா வாக்கு எண்ணிக்கை பார்வையாளார் ஓம்பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் வழங்கினார்.
உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மேயர் .ந.தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் ..ஜெய்பீம் திருப்பூர் சார் ஆட்சியர் செல்வி சௌம்யா ஆனந்த் ஆகியோர் உள்ளனர்.