கோவையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் முப்பெரும் விழா

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது. மக்களிடம் செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொன்னதன் விளைவாக இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துள்ளார்கள் இந்திய துணை கண்டத்தில் எங்கும் நடக்காத ஒரு மாபெரும் வெற்றியாக இது அமைந்துள்ளது

அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது தளபதியின் எண்ணமாக இருந்தது ஒவ்வொரு இடமாக சென்று நன்றி சொல்ல வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது

ஆனால் சட்டமன்றம் துவங்கும் காரணம் மற்றும் பல்வேறு பணிகளின் காரணமாகவும் முதலில் ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை அமைத்து மக்களுக்கு நாம் நன்றியை தெரிவிக்கலாம் அதன் பிறகு மற்ற சுற்றுப்பயணங்களை முடிவு செய்யலாம் என்று கூறி அவ்வாறு நடைபெறும் அந்த கூட்டம் கோவையிலே நடைபெற வேண்டும் என்று தளபதி அவர்கள் விருப்பப்பட்டு நமக்கு அந்த ஒரு வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள்

மேற்கு மண்டலம் மேற்கு மண்டலம் என்று பல பேர் பேசிக்கொண்டு இருந்தார்கள் இன்றைக்கு மேற்கு மண்டலம் மொத்தமாக திமுகவின் கையில தான் இருக்கின்றது

என்பதை இந்த மக்கள் நிரூபித்து உள்ளார்கள் எனவே அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது கடமை என தலைவர் கருதுகிறார் கடந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தில் ஒரு சரிவு ஏற்பட்டாலும் கூட முதல் கூட்டத்தை கோவையிலே தான் போட்டார் முதல் திட்டத்தையும் கோவையிலே தான் துவக்கினார்

எனவே அப்படிப்பட்ட ஒரு தலைவராக இன்றைக்கு தளபதி அவர்கள் இருந்து வருகிறார் எனவே கோவை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு கூட்டம் நடைபெற இருக்கிறது

எனவே முதல்வர் நமக்காக வெற்றிக் கனியை கொடுத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அதேபோல முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101வது ஆண்டு துவக்க விழா இருக்க வேண்டும் என்று கூறினார் அப்பொழுது நிர்வாகிகள் இத்தனை பாடுபட்ட இத்தனை திட்டங்களை கொடுத்த தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.

அப்போது தலைவர் எழுந்து நானும் உங்களில் ஒருவன் தொண்டன் தான் எனவே கழக நிர்வாகிகளுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தால் போதும் என்று கூறினார் என்னுடைய பெயரை தனியாக போட்டு நீங்கள் செய்யக்கூடாது

என்று எடுத்துக் கூறி சென்று விட்டார் அதன் பிறகு தலைவர்கள் எல்லாம் எடுத்து அவரிடம் சொல்லி அதன் பிறகு அனுமதி பெற்று தான் இப்போது அதுவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது இதனால் முப்பெரும் விழாவாக இது நடத்தப்பட உள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு சில கருத்துக்களை எடுத்துக்கூறி எப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும் நம்முடைய தமிழ்நாட்டின்காக எப்படி போராட வேண்டும் என்பதையெல்லாம் விளக்குகிற ஒரு கூட்டமாக நடத்தப்பட உள்ளது,

பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடக்கின்ற போது தமிழ்நாட்டை மனதில் வைத்து அதற்காக நீங்கள் பேச வேண்டும் இது போன்ற பல அறிவுரைகளை அவர்களுக்கு சொல்லிவிட்டு எதையும் எதிர்பார்க்காமல் இந்த கட்சிக்காக பாடுபட்ட அடிமட்ட தொண்டர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் இரவு பகல் பாராமல் எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கக்கூடியவர்கள் அவர்கள்தான் இந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் அவர்களுக்கு நீங்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோசம் கொடுத்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அதை அவர்கள் செய்தார்கள் எம்பிக்கள் கூட்டத்தின் போது.

முதலில் முப்பெரும் விழா 14-ஆம் தேதி வைக்கப்பட்டு இருந்தது ஆனால் ஏற்கனவே நாங்கள் பார்த்த இடத்தில் போட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். ஆனால் மழையின் காரணமாக அங்கு நடத்தப்படவில்லை ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அங்குதான் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டினோம் ராகுல் காந்தி வந்திருந்தார் இந்தியாவிலேயே அத்தனை பெரிய கூட்டங்கள் நடைபெறவில்லை என்று அளவிற்கு பெரிய கூட்டமாக அது இருந்தது அந்த இடமும் எங்களுக்கு அருமையாக அமைந்திருந்தது

எனவே அதே இடத்தில் போட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருந்தது மழையின் காரணமாக அந்த இடம் தற்போது சேரும் சகதியமாக இருக்கிறது மீண்டும் மழை வந்து விட்டால் சிரமம் என்ற காரணத்தினால் தற்போது கொடிசியா வளாகத்தில் இந்த முப்பெரும் விழா நடத்தப்பட உள்ளது 15ஆம் தேதி தலைவரே இதனை எங்களிடம் தெரிவித்து இருந்தார் அந்த வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *