திருவொற்றியூரில் கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமத்தில் அம்மன் கோவிலில் குடமுழுக்கு.
65 அடி உயர ஐந்து. நிலை ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பக்தர்கள் மீது புனித புனித நீர் தெளித்து வழிபாடு.
திருவொற்றியூர்
திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராமத்தில் நூறாண்டு பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன் கோவில் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த கடற்கரை கோவிலில் அமர்ந்திருக்கும் அம்மனை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது அம்மனை வணங்கி விட்டே தொழிலுக்கு செல்வது வழக்கம் இன்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஓம் சக்தி பராசக்தி என்று கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
0.சவரன் தங்க சங்கிலி அம்மனுக்கு வழங்கினார்.
நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்து கலச சொம்பு வழங்கினார்
எண்ணூர் விரைவு சலை திருச்சினாங் குப்பம் கடற்கரை ஒட்டிய பெரியபாளையம் அம்மன் கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது 65 அடி உயர ராஜகோபரத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது
கடந்த 7 ம் தேதி மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ நவகிரஹ ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.
அதனை தொடர்ந்து யாக சாலையில் கலசத்திற்கு அம்மன் போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. மங்கள இசையுடன் தொடங்கிய . பூஜை மஹா பூர்ணாஹீதி , வேதிகா அர்ச்சனை, யாத்ரா தானம், சங்கல்பம், யாகசாலை பிரவேஷம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனை அடுத்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கலசத்தை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து வேதமந்திரங்கள் முழங்க கலசத்தின் மீது ஊற்றி தீபாராதனை செய்தனர்
12 ஆண்டுகள் கழித்து நடைபெறும் கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்தி பரவசத்தில் ஓம் சக்தி பராசக்தி வழங்க அம்மனை வழிபட்டனர்
இதனை அடுத்து பெரியபாளையத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.