போக்குவரத்துக்கு லாயக்கில்லாத ராஜபாளையம் நகர்-பரிதவிக்கும் பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது மதுரை தென்காசி நெடுஞ்சாலை குறுகியதாகவும் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு மற்றும் குண்டும் குழியுமாக பழுதடைந்த ஒருவழிப்பாதை இந்த சாலையை கடந்துதான் மதுரை தென்காசி கொல்லம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும் இதுபோக சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மருத்துவம் விவசாய விளை பொருட்கள் கொண்டு வருதல் பொருட்கள் வாங்குபவர்கள் இப்படி பலவிதமான தேவைகளுக்கும் வாகனங்களில் வந்து செல்பவர்களுக்கு நரக வேதனைதான் ஒரு சிறிய ஆறுதலாக மாற்று வழி பாதையாக
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையை பயன்படுத்தி வந்த வேளையில் அந்த சாலையில் கூட இரண்டு பாலங்கள் ஒரே சமயத்தில் தோண்டியதால்,அந்த வழியாக நடந்துகூட செல்ல இயலாத வகையில் உள்ளது சாலையில் இரண்டு பாலங்கள் போடுவதற்கு குழிதோண்டி அப்படியே போடப்பட்டு விட்டது.
பாலம் தோண்டப்பட்டு நடமாட முடியாத அளவிற்கு இருப்பதால் இப்பகுதி வழியாக எந்த ஒரு வாகனமோ, மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பாலமாக வேலை பார்க்க வேண்டிய நகராட்சி நிர்வாகம்
2 பாலங்களையும் ஒரே சமயத்தில் தோண்டி போட்டு கடந்த இரண்டு மாத காலமாக வேலை செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.
இதன் காரணமாக இன்று பள்ளி திறந்ததால் இப்பகுதி வழியாக பஞ்சு மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரையிலான ஒரு கிலோமீட்டர் பாதையில் எந்த ஒரு கனரக வாகனமோ, பள்ளி பேருந்தோ, வாகனங்களோ, ஆட்டோக்களோ, இருசக்கர வாகனங்களும் செல்ல முடியாத அளவிற்கு ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் ஒரு வழிப் பாதையாக அதை மாற்றி பாதி பாலத்தில் பணிகளைப் பார்த்து பாதி பாலத்தை வாகனங்கள் கடந்து செல்வதற்கு வழிவகை ஏற்படுத்துமாறு ராஜபாளையம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் இப்பாதைகளை ஒருங்கிணைக்க வேண்டிய ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் சரியான வழிகாட்டுதல் இல்லை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இந்த பாதையை கடந்துதான் செல்ல வேண்டிய நிலையில் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய நெடுஞ்சாலைத்துறை
நகராட்சி நிர்வாகம் காவல்துறை மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் உறக்கம் களைவது எப்போது நாம் இந்த நரக வேதனையிலிருந்து மீள்வது எப்போது என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது