திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் பேரூராட்சி நிர்வாகத்தால் குடிநீர் குழாய் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குடிநீர் குழாய் ஒவ்வொரு வார்டுகளுக்கும் விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்பட்ட பிறகு மற்றொரு வார்டுக்கு செல்ல வேண்டும் இதன் மூலம் அனைவருக்கும் குடிநீர் குழாய் கிடைக்கும் என வலியுறுத்தி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சசிகுமார் ஒன்றிய செயலாளர் ஆர் எம் டி சி மாரியப்பன் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
தொடர்ந்து 100% விண்ணப்பித்த அனைவருக்கும் குடிநீர் குழாய் வழங்க வேண்டும் ஒவ்வொரு வார்டு வாரியாக அனைவருக்கும் குடிநீர் குழாய் வழங்கப்பட்ட பிறகே மற்றொரு வார்டுகளுக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி மனுவில் கூறப்பட்டுள்ளன.
தொடர்ந்து இந்நிகழ்வில் தேமுதிக களஞ்சியம் சமூக ஆர்வலர்கள் சுந்தரம், ஜீவானந்தம்,
பொன்.முருகானந்தம், அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்தனர்.