தென்காசி
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயிதே மில்லத் 129 வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தென்காசி நகர கிளையின் சார்பாக காயிதே மில்லத்தின் 129 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா தென்காசி கொடிமரம் திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நகர்மன்ற உறுப்பினர் அபூபக்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் முகமது முஸ்தபா அனைவரையும் வரவேற்று பேசினார்
முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் கொடியேற்றி வைத்தார் மாவட்டத் தலைவர் ஹாஜி அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலாளர் செய்யது பட்டாணி, மாநில விவசாய அணி செயலாளர் தென்காசி முகமது அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் வளர்பிறைச் சங்கம் சார்பில் காசிம் காயிதே மில்லத் நற்பணி மன்றம் சார்பில் ஹமீது யாசின் ஆகியோர் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முடிவில் தென்காசி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் அபூபக்கர் அனைவருக்கும் நன்றி கூறினார்.