கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சியினர் மூன்றாவது முறையாக பாரத பிரதமராக நரேந்திர மோடி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றதை தொடர்ந்து புவனகிரி பாலக்கரை அருகாமையில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர்
இதில் லட்சுமி நரசிம்மன் ஒன்றிய துணைத் தலைவர் மற்றும் ஒன்றிய தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் கட்சியினர் ஜோதி, விஜயகுமார், ஆறுமுகம், ரவி, ராமநாதன், கந்தசாமி, சக்திவேல், குமரேசன், அரவிந்தன், பழனி, ராஜாராமன், ராஜராஜன், ஏழுமலை, அம்பலவாணன், சுரேஷ், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் ஆட்டோ ராஜேந்திரன் நன்றி கூறினார்