காட்டுமன்னார்கோயில் அருகே ஸ்ரீ வட பத்திரகாளி
காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுகா தொரப்பு வேலப்பூண்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ வடபத்ர காளியம்மன் ஆலய ஜீரண தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் முதல் கால யாகசாலையில் ஜோகோ நிறுவன இயக்குனர் கீர்த்திவாசன் அவர்களும் நாகப்பட்டினம் பிரபாகர் அவர்களும் சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவையின் நிறுவனத் தலைவர் நாகராஜ் அவர்களும் வழக்கறிஞர் தர்மராஜ் அவர்களும் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் கிராம நிர்வாகிகளும் முக்கியஸ்தர்களும் புரட்சியாளர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பிரம்மஸ்ரீ சிற்பி இரா பரமகுரு சிறப்பாக ஏற்பாடு செய்தார்