பென்னாகரத்தை அடுத்துள்ள செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பள்ளத்தூர் அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதில் பள்ளிக்கு செல்லாமல் தொழிலாளர்களாக மாற்றப்படுவது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் கல்வி கற்க வேண்டிய வயதில் குழந்தை தொழிலாளர்களாக இருப்பது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க உலகளாவிய சமூக பாதுகாப்பு என்ற பெயரில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பதற்கான நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தி வருகிறது
எனவும் கூறி குழந்தை தொழிலாளர் தின உறுதிமொழியை தலைமையாசிரியர் மா. பழனி தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி,கல்பனா, திலகவதி ராஜேஸ்வரி
மற்றும் அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் பள்ளி மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *