ராஜபாளையம் நகர் பகுதியில் குண்டும் குழியுமாக சாலைகள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலை மட்டுமே தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. மாற்று வழி பாதையாக இருந்து வந்த டி.பி. மில்ஸ் சாலையில் இரண்டு பாலங்கள் ஒரே சமயத்தில் தோண்டப்பட்டு பணிகள் இரண்டு மாத காலத்திற்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே பேருந்துகள் கனரக வாகனங்கள் மற்றும் இதர பள்ளி கல்லூரி செல்லும் வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், நடந்து செல்லும் பொது மக்களும் செல்ல வேண்டிய அவலம் இருந்து வருகிறது.

இதன் எதிரொலியாக பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு செய்திருந்தன. இந்நிலையில் இரவோடு இரவாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் பேட்ச் ஒர்க் எனப்படும் ஒட்டு போடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சாலை குண்டுமுழியுமாக இருப்பது ஓரளவு சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இயலாத நிலையில் ராஜபாளையம் மக்கள் திணறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *