செங்குன்றம் செய்தியாளர்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டு சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது.
ஆந்திரா, கர்நாடகா ,மகாராஷ்டிரா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் லாரிகளில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள ஆட்டு சந்தையில் இறக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றார்கள்.
இந்த வருடம் ஆடுகளின் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் அதனை பொறுப்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர். குறைந்த எடையுள்ள ஆடுகள் சுமார் 10,000 ஆயிரம் ரூபாய் வரையும் 25 கிலோவிற்கு மேல் உள்ள ஆடுகள் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக இந்த வருடம் 20 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர் . மேலும் தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் சுல்தான் செய்தியார்களிடம் கூறும் போது தமிழ்நாடு எல்லைக்குள் லாரிகள் வரும்போது போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாக உள்ளதாலும் இந்த நிலை தொடர்ந்தால் அனைத்து வியாபாரிகளும் ஒன்றிணைந்து ஆரம்பாக்கம் முதல் புழல் வரையிலும் ஆடுகளை நடைபயணமாக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாகவும் இதனை ஈடுகெட்ட கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது எனவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் சந்தையில் விற்பனைக்காக வந்துள்ளது என கூறினார்.
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மாதவரத்தில் ஆட்டு சந்தையில் வியாபாரம் அமோகம்.