தமிழக அரசின் ஆணைப்படி, கடந்த 1999-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி மதுரை மாநகரில் சட்டம் & ஒழுங்கு, போக்குவரத்து காவல் பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த136, தலைமை காவலர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
பதவி உயர்வு பெற்றவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் Dr.லோகநாதன்,IPS., அவர்கள் நேரில் அழைத்து பணி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி, வரும் காலங்களில் சிறப்பாக பணிபுரிந்து தமிழ்நாடு காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டுமென தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.