தமிழக அரசு உதவியால் தான் தங்கம் வென்று இருக்கேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்க்கு நன்றி சொன்ன தமிழகத்தின் தங்கமங்கை

விளையாட்டு மருத்துவர் ஆக வேண்டும் என்று ஆசை மத்திய அமைச்சர் L.முருகனை சந்திக்க வேண்டும் என கோரிக்கை

மேற்குவங்காளம் சிலிகுரில் கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தேசிய அளவிலான வாகோ இந்தியா இளையவர் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.இதில் நாடு முழுவதிலிருந்து 27 மாநிலங்கள் பங்கு பெற்றனர். 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் தமிழக சார்பில் நிவேதா சீனிவாசன் பங்கு பெற்றார. தொடரின் ஆரம்பம் முதலில் தனது ஆதிக்கத்தை செலுத்திய நிவேதா முதல் நான்கு போட்டியில் டெக்னிக்கல் நாக் டவுன் முறையில் 45 நொடியில் போட்டியை முடித்து வெற்றி பெற்றார்.

கிக் லைட் பிரிவில் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு உத்தரகாண்ட் அணிகள் மோதினர். முதலில் சற்று தடுமாறிய நிவேதா பின்பு சுதாரித்துக் கொண்டு உத்தரகாண்ட் வீராங்கனையை வாழ்த்தினார்..

லைட் காண்டாக்ட் மற்றொரு பிரிவில் ஆரம்பம் முதலில் ஆதிக்கம் செலுத்திய நிவேதா சீனிவாசன் கர்நாடகா வீராங்கனையை விழ்த்தி வெற்றி பெற்று தங்கபத்தகத்தை உருதி செய்தார்..

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சூர் கிக் பாக்சிங்களில் இதே பிரிவில் தங்கம் வென்ற நிவேதா சீனிவாசன் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்க பதக்கங்களை வென்று தங்கமங்கையாக சென்னை விமான நிலையம் வந்த நிவேதா ஸ்ரீனிவாசனை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிவேதா:

எனக்கு 17 வயது ஆகிறது மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் பங்கேற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் ஜூனியர் பிரிவில் 15 வயது முதல் 18 வயது நிரம்பியவர்கள் உடன் போட்டியிட்டேன். மூன்றாவது முறை தங்கம் வென்றுள்ளேன். அதுவும் இரண்டு தங்கம் இந்த முறை பெற்றுள்ளேன். என்னுடைய பயிற்சியாளர் சுரேஷ் பாபு அவர்களால் என்னால் தற்போது வெற்றி பெற முடிந்தது. 45 தமிழக வீரர்கள் பங்கு பெற்றோம் அதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது 31 பதக்கங்கள் பெற்றுள்ளோம். கடந்த முறை ஜார்கண்டில் நடந்ததை விட இந்த முறை போட்டி கடினமாக இருந்தது. 7 போட்டிகள் பங்கேற்றி அதில் நான்கு போட்டிகளில் நாக்அவுட் முறையில் வெற்றி பெற்றுள்ளேன். கர்நாடகா அணி மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்.

தமிழகஅரசு உதவியால் தான் நான் தங்கம் வென்று இருக்கேன். அதனால் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.

எனக்கு ஒரு கண் குத்துச்சண்டை விளையாட்டு என்றால்,மற்றொரு கண் கல்விதான். வருங்காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவராவதற்கு ஆசைப்படுகிறேன் அதற்காக மத்திய அமைச்சர் முருகன் பார்க்க ஆசைப்படுகிறேன் என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *