அமெரிக்காவின் நாசா N.S.S I.S.D.C மாநாட்டில் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் பங்கேற்று சாதனை

அமெரிக்காவின் நாசாவில் NSS ISDC மாநாடு நடைபெற்றது. இதில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஸ்ரீசைதன்யா பள்ளியைச் சேர்ந்த 167 மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை புரிந்தனர்.

இது குறித்து,
ஸ்ரீசைதன்யா பள்ளியின் இயக்குநர் சீமா கூறுகையில்: சமீபத்தில் நடைபெற்ற நாசாவின் NSS
விண்வெளி தீர்வு போட்டிகள் 2024-இல் 28000 மாணவர்கள் இந்தியாவில் இருந்து மட்டும் கலந்து கொண்டனர்.

இதில் ஸ்ரீசைதன்யா பள்ளியைச் சேர்ந்த 639 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 62 செயல் திட்டங்கள் வெற்றி பெற்று ஸ்ரீசைதன்யா பள்ளி முதல் இடத்தைப் பிடித்து தொடர்ந்து 11வது முறையாக உலக சாம்பியனாக வெற்றி வாகைச் சூடியது.

இதில் 7 செயல் திட்டங்கள் உலக அளவில் முதல் பரிசையும், 11 செயல் திட்டங்கள் உலக அளவில் இரண்டாம் பரிசையும், 15 செயல் திட்டங்கள் உலக அளவில் மூன்றாம் பரிசையும், 29 செயல் திட்டங்கள் கௌரவ பரிசையும் வென்றது.
மேலும் இந்தக் கல்வி சுற்றுலாவில் தமிழகத்தின் ஸ்ரீசைதன்யா பள்ளியைச் சேர்ந்த 32 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வேறு எந்த கல்வி நிறுவனத்திலிருந்தும் எந்த ஒரு மாணவரும் ISDCஇல் பங்கேற்கவில்லை. தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் மட்டுமே தகுதிப் பெற்று பங்கேற்றனர்.


இந்த மாநாட்டில் இலக்கியம் மற்றும் கலைத்துறையில் 500 டாலர்கள் பரிசு பெற்ற உலகின் ஒரே மாணவர் ஸ்ரீ சைதன்யா பள்ளியைச் சேர்ந்தவர் என்பதும் ,கடந்த
13 ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா NSS ISDC-இல் தொடர்ந்து கலந்து கொண்ட ஒரே ஒரு குழு என்பது ஒரு புதிய சாதனை என தெரிவித்தார்..


மாநாட்டின் போது, ஸ்ரீசைதன்யா பள்ளியின் மாணவர்கள் புகழ்பெற்ற நாசா விண்வெளி வீரர்களை ஜோஸ்.எம். ஹர்னான்டஸ் மற்றும் பிரையன் வெர்ஸ்டீக், கருத்தியல் வடிவமைப்பாளர், spacehabs.com ஆகியோரை சந்தித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.


நாசாவின் ISDC மாநாட்டில் பங்கேற்க பெரும் முயற்சி செய்த ஸ்ரீசைதன்யா பள்ளி நிர்வாகத்திற்கு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நாசாவின் NSS ISDC மாநாட்டில் பங்கேற்று வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஸ்ரீசைதன்யா பள்ளியின் இயக்குநர் சீமா தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *