மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா துவங்கியது, இதை அடுத்து தினந்தோறும் ஆலயத்தில் விசேஷ ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வாகிய தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரை அருட்திரு ஜோசப்சுதாகர் புனித நீர் தெளித்து அர்ச்சித்து தேர் பவனியை துவங்கி வைத்தார்.
மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா பவனி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் தேவாலயத்தை அடைந்தது.நிகழ்ச்சியில் சுல்தான் பேட்டை மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்திரு சுந்தர், மற்றும் அருட்திரு ஹென்றி ரோச் உதவி அதிபர் நல்லாயன் குடும்பம், பங்குத்தந்தை ஹென்றி லாரன்ஸ் உட்பட அருட் சகோதரிகள் ,அன்பியங்கள், பங்கு குழுக்கள்,இறை மக்கள் கலந்து கொண்டனர்